Follow by Email

Friday, 12 December, 2014

தோழன் விழிவேந்தன்

வாழ்த்த விருப்பமில்லை..
நடு இரவில் முதல் தொலைபேசி 
அழைப்பில் குரலால்
வாழ்த்த விருப்பமிவில்லை..
காலையிலே உந்தன் வீட்டின் 
அருகே கட் அவுட் வைத்து
வாழ்த்த விருப்பமிவில்லை..
முகநூலில் ஹாப்பி பர்ட்த்டே 
என்று ஸ்டேடஸ் போட்டு
வாழ்த்த விருப்பமிவில்லை..
ஒரு கேக் வாங்கி உன்னை 
ஆச்சரியப்படுத்தி வெட்ட சொல்லி
வாழ்த்த விருப்பமிவில்லை..
என் தோழிகளிடம் உனக்கு 
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொல்லி
வாழ்த்த விருப்பமிவில்லை..
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
என்று எல்லாருக்கும் தெரிந்த வசனம் சொல்லி
வாழ்த்த விருப்பமிவில்லை..

பிறகு எப்படி வாழ்த்துவேன்.???????????????
அதான் சொல்லிட்டேனே உன் பிறந்த நாளுக்கு 
எனக்கு வாழ்த்த விருப்பமில்லை..
வாழ்த்து சொல்லிக்கொள்ள 
சம்பிரதாயமான உறவா நம்முடையது???? 
இல்லையே..!!!!!!!!!!!!!

பாத்திருக்கிங்களா..???
கோபப்படத் தெரியாத கோபக்காரனை
ஒரு புரட்சியாளனை பாத்திருக்கிங்களா.?
கம்யூனிசமும் திராவிடமும் தலித்தியமும்
தமிழ் தேசியமும் பேசுகிற ஒரு மனிதனை பாத்திருக்கிங்களா..??
பொருளாதாரத்தை சம்பாதிக்காவிட்டாலும் பொறுமையை
சம்பாதித்து வைத்திருப்பவனை பாத்திருக்கிங்களா...???

கம்யூனிச கட்டுடைப்புகளை கட்டவிழ்த்து
விளக்குகிற வித்தை கற்றவன் அவன்!
எந்த இசம் பேசினால் கம்யூனிசத்திற்கு
ஈடு இணை இல்லை என்பான் அவன்!!
பொது உடைமை சிந்தனை தவிர உலகில்
சிறந்த சிந்தனை இல்லை என்பான் அவன்!!!
மக்களுக்கான ஜனநாயகத்தையும்
தேசத்திற்கான அதிகாரத்தையும் பெற
அமைப்பாய் இயங்கும் தோழமைகளுடன்
சேர்ந்து இயங்கும் எனதருமை தோழன்தான் அவன்!!!!

யாரென்று தெரிகிறதா அவன் விழிவேந்தன் தான் என்று புரிகிறதா..????
  
ஓர் ஆசை
ஏழு வருட நட்பில் ஒரு முறை கூட சண்டை வராமல்
பார்த்துக் கொண்டவன் அவன்!
மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா அப்படின்னா
என்று கேட்க வைத்தவன் அவன்!

நட்புக்குள் பெண்ணால், பணத்தால், பதவி உயர்வால் சண்டை
வருமாமே???

புஜ்ஜிமாவாலும் செல்லம்மாவாலும் நமக்குள்
சண்டை வரவில்லை
(அபி..???????)

எந்தன் உணவுக்கான தொகை உந்தன்
பையிலிருந்தே வருகிறது
உந்தன் தேநீருக்கான தொகை எந்தன்
கைகளிலிருந்தே வருகிறது
பிறகெப்படி, பணம் நமக்குள்
சண்டையை உண்டு செய்யும்...

நீ எனக்கு அசோசியேட்டாக இருந்தாலும்
எனக்கு நீ அப்ரண்டீசாக வேலைபார்த்தாலும்
மகிழ்வுடனேயே ஏற்றுக்கொள்கிறோம்
பிறகெப்படி பதவி உயர்வால் நமக்குள்
சண்டை வரும்..?

எனக்கு ஒரு ஆசை
எனக்கும் உனக்கும் சண்டை வர வேண்டும்
அது என்ன காரணத்திற்கு என்று எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும்..!
(கட்சியா...????)

பிறந்த நாள் வாழ்த்து  
உனக்காய் உந்தன்  பிறந்த நாளுக்காய்
ஏதேதோ புதுசாய் செய்து
உன்னை கவர்ந்து விடவும்
உந்தன் மேல் நான் எவ்வளவு
பாசம் வைத்திருக்கிறேன் பார்
என்று நிரூபிக்கவும் ஏதேதோ
மெனக்கிடல்களில் முயன்றேன்

பிறகு விட்டு விட்டேன்
அப்படி செய்து தான் நான் உன்னை
கவர வேண்டுமா என்ன..????
போடா டேய்......

இயக்குனர் விழி
படப்பிடிப்பு தளத்தில் எல்லாரும் பரபரப்புடன் இயங்குவார்கள்
ஒருவன் மட்டும் சுறுசுறுப்புடன் இயங்குவான்

ஒருநாள் படம்பிடித்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த போது
புரொடெக்சன் மேனேஜர் தம்பி தப்பு
நான் இயக்குனரிடம் சொல்வேன் என்று மிரட்டிச் சென்றார்
பாவம் காலையில் அந்த புரொடெக்சன் மேனேஜரே
காணாமல் போனார் 

நான் + நீ
நான் எங்கெல்ஸா  எனக்கு தெரியாது ஆனால்
எனக்கெப்போதும் நீ தான் மார்க்ஸ்
நீ துரியோதனனா  எனக்கு தெரியாது- ஆனால்
உனக்கு என்றென்றும் நான் தான் கர்ணன்
(நம்மிருவரை தவிர யாராலும்
புரிந்துகொள்ள முடியாத
வரிகள் இவை...)


வாழ்த்துக்கள்


என் செல்லத்துக்கு
பிரியமுள்ள அண்ணனுக்கு
மானமிகு தோழனுக்கு
மரியாதைக்குரிய காம்ரேட்டுக்கு

இனி வரும் காலம் உனக்கு
வசந்தத்தின் இடிமுழக்கமாய்
வாழ்நாளெல்லாம் வசந்த காலமே!!!

வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!


Friday, 29 March, 2013

நிழல் இதழ் தயார்


நிழல் ஏப்ரல் மே 2013

இந்த இதழில்

கேமரா வாங்க வேண்டுகோள்


விருது பெற்ற படங்கள் :
லிங்கன்:விடுதலையின் அதிகார வடிவம்
அமூர்:காதலின் கருணை வடிவம்
விஸ்வரூபம்:விடுவாசத்தின் கலை வடிவம்
பியட்டா:உடலின் பொருளியல் வடிவம் -ஜமாலன்

வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் - சைமன் ஜார்ஜ்

நவீன இந்திய சினிமா -விட்டல்ராவின் புதிய தொடர்

கலகக்கார கலைஞர்கள் 2 - ஜாபர் பனாஹி - நெய்வேலி பாரதிகுமார்

நினைவு தோணியில் ஆதிமூலம் - திருநாவுக்கரசு

திரைக்கதை வடிவம் - மணி

தமிழ்திரையில் நகைச்சுவை நடிக நடிகைகளின் பங்களிப்பு:23-
கொத்தமங்கலம் -திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்

திரைக்கதைக்கான பயிற்சி சிறுகதை: செவ்வாழை -அண்ணாதுரை
திரைக்கதை வடிவம் -சைமன் ஜார்ஜ்

28வதுகுறும்பட பயிற்சி பட்டறை அனுபவ பகிர்வு - ஷஹான் நூர்Saturday, 2 March, 2013

உழைப்பாளி தம்பி


கோவையில் நிழல்-பதியம் இணைந்து நடத்திய குறும்பட பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர்களில் நானும் ஒருவன், என்னுடன் இணைந்து பணியாற்றிய தோழனைப் பற்றி.... என் வரி..


ஒரு மனிதன்
இருபது வயதே இன்னும்
நிறைவுறாத இளைஞன்
65 பேரில் ஆரம்பித்து
15பேர் அதிகமாக
மொத்தம் 80 பேருக்கும் சேர்த்து
ஒருவனின் உழைப்பு
மின்சாரம் துண்டித்தால்
ஓட்டை ஜெரேட்டரை ஓடவைத்து
ஓடி ஓடி உணவு பரிமாறி
குடிக்க தண்ணீர்
சூடான தேநீர்
உணவு எல்லாம் உபசரித்து
தீர்ந்தால் உடனடியாய்
தயார் செய்து
ஓயாமல்
சளைக்காமல்
அவ்வபோது ஒளிப்பதிவும்
செய்து கொண்டு
என்னையும், எங்களையும் கவனித்துக்கொண்ட
என் உடன் பிறவா அன்புத் தம்பி

என்னால் பாரி என்றும்
எங்களால் விஜி என்றும்
அழைக்கப்படும்
எங்களின் கலைத் தந்தை
’நிழல்’ திருநாவுக்கரசு அய்யா பெற்றெடுத்த
இரண்டாவது தவப்புதல்வன்


உந்தன் கடின உழைப்புக்குத்
தலைவணங்குகிறேன்டா
தம்பி...

Saturday, 17 March, 2012

குருவுக்கு சீடர்கள் எடுத்த விழா - ரமேஷ் சார் பணி ஓய்வு விழா


முன்னாள் முதல்வருக்கு இந்நாள் முதல்வர் சிறப்பு செய்கிறார். அருகில் கணேஷ்  அண்ணா

…”ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே என்னை அர்ப்பணி” என தன்னுடைய வாழ்நாளில் இருபத்து ஐந்து வருடம் குருவாக இருந்து பல சிஷ்யர்களை உருவாக்கிய திரைப்படக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் படப்பதனிடுதல் துறையின் தலைவர் திரு.ரமேஷ் சார் அவர்கள் 29.0202012 அன்று பணி ஓய்வு பெற்றார்.


அவரிடம் படித்த மாணவர்கள் சார்பாக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரதாப் ப்ளாசா என்ற இடத்தில் நடைபெற்றது.


பத்திரிக்கையில எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் எந்த செய்தியாக இருந்தாலும் பத்திரிக்கை பாணியிலேயே செய்தி எழுத வருகிறது. இந்த பாணி, இந்த செய்திக்கு தவறு. ஏன்னா எங்க  ரமேஷ் சாருக்கு எங்க சீனியர் அண்ணன்களும் என் நண்பர்களும் ஜூனியர் தம்பிகளும் சேர்ந்து ஒரு விழா எடுத்து இருந்தோம்.


எப்போதும் போலான சம்பிரதாயமான விழாவாக இல்லாம எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என ஆரம்பித்தார் கணேஷ் அண்ணா .


விட்டல் சார், மற்றும் பழைய மாணவர்கள் நரசிம்மன் மற்றும்  லோகேஷ் ஆகியோருக்கு  மவுன அஞ்சலியுடன் விழா துவங்கியது.

கணேஷ் அண்ணா தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்ப பிரசாத் லேப்ல டிஐ கலரிஸ்ட். சூப்பராக பேசுனாரு கல்யாணம் ஆனவருன்னு சொல்ல முடியாது இளமை ஊஞ்சல் ஆடும். இவர் பேசுனதை பார்த்த போது தான் தோணுச்சு ஒழுங்க இவர் டிவி காம்பயரிங் போகலாமேன்னு .ம்ம்ம்ம் அது அவர் முடிவு பண்ணனும்.  நான் காலேஜ் படிக்கும் போது பிரசாத் லேப் விசிட்டிங் போனேன். கூப்பிட்டு வச்சு கேள்வி கேட்டே கொன்னுட்டார். நல்ல வேலை இங்க எதுவும் கேள்வி கேட்காமல் விட்டார்.


நிகழ்ச்சியை தொடர்வோம்…

பிரம்மாண்டமான கேக் வெட்டி விழாவினை தொடங்கினோம்..
ஒவ்வொரு மாணவர்களாக வந்து ரமேஷ் சாருக்கும் அவர்களுக்குமான பந்தத்தை பற்றி விளக்கினார்கள். எல்லோரும் சொன்னது ரமேஷ் சார் ரொம்ப நேரம் கிளாஸ் எடுப்பது பற்றியும் , பிலிம் லைக் க பேபி என்றும், போ நாய் போ என கரகர குரலில் சொல்வது பற்றியும் விளக்கி தீர்த்தனர். ( கலாய்ச்சாங்களாமாம் ).


நான் சார்கிட்ட படிக்கும் போது ஒரு புக் வாங்கிட்டு வந்தேன். அப்ப அதை திருப்பி கொடுக்கவே இல்லை. ஆனால் இப்ப தரேன் என்று ஐந்து வருடங்களுக்கு பிறகு கொடுத்தார் ரஞ்சித்.


இண்டஸ்ட்ரியில் ஜெயித்த மாணவர்கள் பலரின் வருகை ஜெயிக்க துடிக்கும் வருங்கால மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அப்படி வந்து இருந்த அண்ணன்கள் திருமதி செல்வம், தென்றல் ஆகிய தொலைக்காட்சி தொடரின் ஒளிப்பதிவாளர் மாட்ஸ், சங்கர் - தூர்தர்ஷன் கேமராமேன், பாலமுருகன் - 15 வருடங்களுக்கும் மேலாக ஐதராபாத் பிரசாத் லேபில் கிரேடர், தற்சமயம் ஜெமினி டி. கலரிஸ்ட், சுப்புராம்ஜெமினி லேப்பிப் கிரேடர். அழகிய மணவாளன் ஆயுள் ரேகை, தேநீர்விடுதி ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆகியோரின்  வருகை விழாவினை வேறொரு தளத்துக்கு எடுத்து சென்று சிறப்பித்தது.


மாணவர்கள் ரமேஷ் சார் பற்றி பேசியதை விட ஆசிரியர்கள் பேசியது தான் ஹைலைட் ஆஃப் த ஃபங்சன். சீனு சார் என எங்களால் செல்லமாக அழைக்கப்படுன் சீனிவாசன் சார் அவர்கள் ரமேஷ் சாரோட எம்ஏ படித்தது பற்றி சொன்னார்.
விழா நாடை பெற்ற இடம்
 

எல்லாரும் லாட்ஜ் எடுத்து படித்தார்களாம். திடீரென ரமேஷ் சார் நான் வீட்டுக்கு போறேன்னு கிளம்பிட்டாருன்னா எல்லாரும் தூங்கிடுவாங்களாம் . போய் திரும்பி கொஞ்ச நேரத்துல ரமேஷ் சார் திரும்பி வந்தாராம் என்னப்பான்னு கேட்டதற்கு எங்க வீட்ல கரண்ட் இல்ல அதான் வந்துட்டேன் என்றாராம். அந்த அளவுக்கு படிப்பின் மீது ஆர்வமானவர்.  எக்ஸாம் ஹாலில் சின்சியராக படித்ததை எழுதியது ரமேஷ் சார் மட்டும் தானாம் மற்ற எல்லாரும் பிட் அடித்தார்களாம். சுவாரசியமான தகவல் தான். திடீரென பாணா காத்தாடி இயக்குனர் பத்ரி சார் வந்து இருந்தார். ரமேஷ் சாரின் பழைய நண்பர் ஃபிலிம் சென்ட்டரில் உடன் வேலை பார்த்த ஜெயக்குமார் சார் வந்து இருந்தார்.


ஐதராபாத் டெலிசினி கலரிஸ்ட்டாக உள்ள s.k. பாபு நினைவுப்பரிசு அனுப்பி இருந்தார்.

குதிரை - தங்க செயின் நினைவு பரிசாய்
மாணவர்கள் சார்பாக ஓடுவது போல உள்ள குதிரை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. சார் எப்போதும் சினிமாவில் ஓடிக்கிட்டே இருக்க வேண்டும் என்பதன் அர்த்தத்தை தான் அது குறிப்பதாக சொல்லி கொடுத்தோம்.

பிலிமில் இருந்து வெள்ளி எடுக்கலாம்னு சொல்லிக்கொடுத்தவருக்கு தங்கத்தினால் ஒரு செயின் நினைவுப்பரிசாக அணியப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குன அண்ணன் கணேஷ் ஆங்காங்கே பஞ்ச் பலவற்றை அள்ளி தெளித்தார்.

ஆசிரியராக இல்லாமல் இருந்தால் சைக்கார்டிஸ்டாக போய் இருப்பார் சார் அந்த அளவுக்கு மனித மனங்களை உணர்ந்தவர் .

குருவுக்கே உதாரணமாக துரோணச்சாரியாரை தான் சொல்வாங்க ஆனால் அந்த துரோணரே இப்போ  இருந்து இருந்தால் உங்களிடம் பாடம் படிக்கலாம்ன்னு ஆசைப்பட்டு இருப்பார்.

தோற்றம், கம்பீரம், எளிமை, போன்றவற்றில் காமராசருடன் ஒத்து போறிங்கன்னு சாரோட தலையை குறி வைத்து பேசினார்.

உலகமே சச்சினின் 100வது சதத்தை எதிர்பார்க்கிறது ( இப்பதான் அடிச்சு புட்டாரே நூறாவது 100 ) அதை அவர் நிறைவேற்றி விட்டார். .
ஆனால் நாங்கள் உங்களுடைய 100 வது பிறந்தநாளை இதேபோல் சிறப்பாக கொண்டாடவேண்டும் என எதிர்பார்க்கிறோம். நிறைவேற்றுங்க சார்..

சொல்லிகொடுத்த புத்தகங்கள்

எக்ஸ்போசர் புக் படிக்க சொன்னீங்க - கேரியர்க்கு எக்ஸ்போசர் கிடைத்தது.
டாமினிக் கேஸ் புக் படிக்க சொன்னீங்க - எங்களை யாரும் டாமினேட் பண்ணமுடியல.

பேசிக் போட்டோகிராபி புக் படிக்க சொன்னீங்க - எங்க பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் ஆச்சு.

போட்டோகிராஃபி தியரி ஃபார் மோஷன் பிக்சர் கேமரமேன் புக் படிக்க சொன்னீங்க  - கேமராமேன்களிடம் போட்டோகிராஃபி பற்றி தியரியா பேச முடிஞ்சது.
அனைத்து மாணவர்களுடன்

கலர்-ன்னா என்னன்னு சொல்லி கொடுத்தீங்க- இன்னைக்கு கலரிஸ்ட்டா இருக்கேன்.

கடைசி வரை  என்னை பேச கூப்பிடவே இல்லை. கடைசியாக கவிஞர் தாஸ் என்றார். என் இந்த கொலை வெறி என மனசுக்குள்ள நினைத்துகொண்டு ஒரே விசயத்தை தான் சொன்னேன் கிராமத்துல இருந்து சென்னை வந்த ஒரு பையனுக்கு சீட் கொடுத்திங்க சார் உங்க பேரை காப்பாத்துவேன் என்று சிம்பிளாக முடித்தேன்.

முத்து அண்ணா நன்றியுரையில் குறிப்பிட்டது


விழா எங்கு நடத்தலாம் என்று பல யோசனை. இறுதியில் கோடம்பாக்கத்தில் நடத்த முடிவு செய்தோம். ஏன்னா
நாம் தரமணியில் இருந்து வந்து கோடம்பாக்கத்தில்தான் வெற்றிபெற்றவர்கள் என்று பலத்த கர ஒலியில் விழா முடிந்தது.

விழா நாயகன் ரமேஷ் சார் பேசியது :

இனிமேல் தினமும் காலையில் எட்டு மணிக்கு எங்க கிளம்புறதுன்னு 

இந்த புண்ணியரை திரைப்படக்கல்லூரிக்கு தத்து கொடுத்த  அவரின் இணையருடன்
தான் தெரியல. இந்த விழாவையும் ஏற்பாடு செய்த உங்களையும் நான் என்றென்றும் மறக்க மாட்டேன். மேலும் படப்பதனிடல் துறையில் உள்ள அனைவரையும் பற்றி தன் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தார்.
பேச வார்த்தைகள் இல்லாமல் முடித்தார்.

மதிய உணவு மகத்தாய் உள்ளே போனது…


விழாவுக்கு தற்போதைய முதல்வர் மரியாதைக்குரிய எங்கள் அமைதியின் சிகரம் ஸ்ரீதர் சார் இன்னும் பலர் வருகை புரிந்து சிறப்பித்து இருந்தனர்.

மாணவர்கள் எல்லாரும் கொஞ்ச நேரம் கிளாஸ் எடுங்க சார் என்று கேட்ட போது மறுத்த அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார். தொழில்நுட்பத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ போய் நின்றது.

முடித்துக்கொள்ளலாமே என யாரோ கத்தியதை எல்லாரும் ஏற்றுக்கொண்டதை போல கலைந்து சென்றோம்.

ரமேஷ் சார் கனத்த மனத்துடன் வீடு சென்றார். நாங்கள் பிரிய முடியாமல் பிரிந்து வந்தோம்…

 -தாஸ்..,


Related Posts Plugin for WordPress, Blogger...